
திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மலையாள மாதமான கும்ப மாதத்தில் பொங்கல் திருவிழா நடைபெறும்.
அதன்படி, இவ்வாண்டுக்கான விழா கடந்த 12ஆம் திகதி ஆரம்பமாகியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.
விழாவில், சுமார் 45 இலட்சம் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சுமார் 25 கிலோமீற்றர் தூரத்திற்கு பக்தர்கள் பொங்கல் வைத்துள்ளனர்.
வழிபாட்டில் ஈடுபட்ட பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காக சுமார் 3 ஆயிரத்து 700 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
