நல்லிணக்க பொறிமுறைகளை ஒன்றிணைப்பதற்கான செயலகம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் நல்லிணக்க பொறிமுறை செயற்பாடுகள்,நிலைமாறு நீதி,பாதிக்கப்பட்டவர்களின் மீளிணைப்பு மற்றும் நல்லிணக்கம்,காணாமல் போனோ ர்கள் தொடர்பான அலுவலகத்தின் செயற்பாடுகள் உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
வளவாளர்களாக நல்லிணக்க பொறிமுறைகள் ஒன்றிணைப்பதற்கான செயலகத்தின் பணிப்பாளர் சஞ்சீவ விமல குணரத்ன ,நல்லிணக்க பொறிமுறைகளை ஒன்றிணைப்பதற்கான செயலகத்தின் பதுளை வலய செயலணி ஒருங்கிணைப்பாளர் நடேசன் சுரேஷ் மற்றும் காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளர்களான சட்டத்தரணி எஸ்.கே.லியனகே,ஜெயதீபா புண்ணியமூர்த்தி கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. அருந்தவராஜா,மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன்,திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
அ . அச்சுதன்






