ஜனாதிபதி ராம் நாத் கோவிந் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்னையை வந்தடைந்துள்ளார்.சென்னை விமான நிலையத்தை இன்று (வியாழக்கிழமை) வந்தடைந்த ஜனாதிபதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது சென்னை டி.நகரில் இடம்பெறவுள்ள ஹிந்தி பிரசார சபா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மகாத்மா காந்தி சிலையை திறந்துவைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது





