எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை இளைஞர்களுக்கு வழங்க ஆரம்பித்துவிட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி.சானக தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பொதுமக்களின் நன்மைக்காக ஒன்றும் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகளை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொள்ளவில்லை. கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ளவே இந்த அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது .
இம்மாதம் 20ம் திகதி தேசிய அரசாங்கம் நிச்சயம் உருவாக்கம் பெறும் என்று ஐக்கிய தேசிய கட்சியினர் குறிப்பிடுவது பொய்யான வாதமாகும். இந்த நாடாளுமன்றத்தில் ஒருபோதும் தேசிய அரசாங்கம் ஒன்று உருவாகுவதற்கு எவ்விதத்திலும் இடமளிக்கமாட்டோம்.
இதற்காக எந்நிலைக்கும் செல்லத் தயார் எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை இளைஞர்களுக்கு வழங்க ஆரம்பித்துவிட்டார்.
இளைஞர்களை மையப்படுத்தியே தேசிய பொருளாதார கொள்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என குறிப்பிடுவர் ஆனால் வேலையில்லா பட்டதாரிகளின் கோரிக்கைகளுக்கு இதுவரையில் தீர்வை காண நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்





