ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டால் கூட அது ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக இருக்கப்போவதில்லை என காவிந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே காவிந்த ஜயவர்த்தன இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தேர்தல் அறிவிக்கப்பட்டால் உரிய நேரத்தில் அறிவிப்போம்.
அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷ ஒரு சிறந்த அதிகாரி என்றே அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி என்பது தொடர்பில் மக்களுக்கு இன்னும் தெரியாது.
அதனால் அதனை உணந்துகொள்ள மக்களுக்கு பிரச்சினை இருக்கின்றது. என்றாலும் ஐக்கிய தேசிய கட்சி சிறந்த அரசியல் அனுபவமிக்க ஒருவரையே பேட்பாளராக நியமிப்போம்” என கூறினார்.





