அல்பேர்டாவில் மிருகங்களுக்கு தேவையற்ற அறுவைச் சிகிச்சைகளைச் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, நாய்களின் காதுகளை வெட்டுதல், நாய்களின் வாலினை வெட்டுதல் ஆகிய இரண்டு சிகிச்சைகளையும் பெருமளவான மக்களின் ஆதரவுடன் தடைசெய்ய அல்பேர்டா கால்நடை மருத்துவம் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த இரண்டு தீர்மானங்களும், அல்பேர்டா விலங்கு நலத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த தீர்மானமானது, விலங்குகளைப் பாதுகாப்பதை உறுதிசெய்வதற்கான முக்கியமான வழிமுறைகளாகும் என கால்நடை வளர்ப்பிற்கான பதிவாளர் மருத்துவர் டாரல் டால்டன் தெரிவித்துள்ளார்.





