
இருதரப்பினருக்கு இடையிலான வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதனாலேயே உள்ளுர் நேரப்படி நேற்று (செவ்வாய்க்கிழமை) பி.ப 2.15 மணியளவில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, கனடாவில் அண்மைக்காலமாகவே இவ்வாறான மோதல்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
