
ஃபோல்ஸ்டஃப் அவென்யூ பகுதியில் உள்ளுார் நேரப்படி நேற்று(செவ்வாய்கிழமை) இரவு 9.30 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது இளம் வயது பெண் ஒருவரே காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், இதன்போது படுகாயமடைந்தவர் குறித்த மேலதிக தகவல்களை வெளியிட பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் மாயமாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
