
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கூட்டமைப்பு தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்த தீர்விற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இது தமிழர்களின் விடயத்தில் அக்கறையில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
இந்த நிலையில் அவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளை வைத்துக் கொண்டே வடக்கில் அரசியல் செய்கின்றார்கள். எனவே அவர்கள் ஒருபோதும் தமிழ் மக்களைக் குறித்து சிந்திக்கப் போவதில்லை.
எனவே இந்த நிலையில் தெற்கு மக்களைக் குறித்து அவர்கள் எந்த வழியிலும் சிந்திக்கப்போவதில்லை. இது எதிர்க்கட்சித் தலைவராக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இருந்தபோது தெளிவாகத் தெரிந்தது” என கெஹெலிய ரம்புக்வெல மேலும் குறிப்பிட்டுள்ளார்.
