எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் கதாநாயகியாக சுருதிஹாசன் நடிக்கவுள்ளார்.இத்திரைப்படத்திற்கு ‘லாபம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கவுள்ளார்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதனுடன் ‘சிந்துபாத்’, ‘மாமனிதன்’ ஆகிய திரைப்படங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





