
இந்த தாக்குதல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் “இந்தியா ஜம்மு மற்றும் காஷ்மீரில், படையினர் மீது 2019 பெப்ரவரி 14 அன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் அதேவேளை, இலங்கை நாடாளுமன்றத்தின் உறுதியான ஒற்றுமையை இந்த நேரத்தில் இந்திய மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் மீண்டும் உறுதிபடுத்துகிறேன்.
பயங்கரவாதத்தை எதிர்த்து அதன் அனைத்து வடிவங்களிலும், போராடுவதற்கு இலங்கை நாடாளுமன்றம் உறுதியாக உள்ளது என்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும் தாமதமின்றி இந்த அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதற்கு, அனைத்து நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என கூறியுள்ளார்.
கடந்த வியாழனன்று இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அமைப்பான ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
