இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில் இன்று (புதன்கிழமை) இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இதன் படப்பிடிப்புகள் விருதுநகரில் நடைபெறவுள்ளதையடுத்து தனுஷ் உட்பட்ட படக்குழுவினர் நேற்று விருதுநகருக்குச் சென்றனர்.
விருதுநகர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் அசுரன் படப்பிடிப்புகள் நடக்கவுள்ளன.
தனுஷூடன் மஞ்சுவாரியர் முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கும் இப்படத்தில் வடிவேலு, அஜய்ராஜ், பிரேம்ஜி அமரன், விஜய்வசந்த், வைபவ், நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதோடு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். அத்துடன் விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.






