இந்த நிலையில் அவருடைய அடுத்த படமான ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
வெங்கட்பிரபு இயக்கவுள்ள இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தெரிவுகள் இடம்பெற்றுவருகின்றன. அந்தவகையில், இப்படத்தில் நடிகர் ஜெய் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சிம்புவுக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கவிருக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
ஏற்கனவே சிம்புவுடன் ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தில் ஜெய் நடிக்கவிருந்தார். எனினும் அந்த படம் எதிர்பாராத வகையில் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






