ரவி சங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் பிரீத் சிங், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் என பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
ஹரிஸ் ஜெயராஜ் இசைகளில் அனைத்துப்பாடல்களும் வெற்றிநடை போடுகின்றது. இத்திரைப்படத்தை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கின்றார்.
இத்திரைப்படம் தனிமனித உரிமைகளையும் சாகசம் நிறைந்த வாழ்க்கை குறித்த திரைப்படமாகவும் காதல் நிறைந்த திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபு தேவா, தமன்னா நடித்துள்ள ‘தேவி 2’ திரைப்படம் இதே நாளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இதே கூட்டணியில் வந்த முதல் பாகம் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
box office வசூல் சாதனையை இந்த திரைப்படங்கள் முறியடிக்குமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.






