
இந்த தாக்குதல் சம்பவம், கட்சித் தலைவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில் தான் இடம்பெற்றது என்றும் இங்கு நாட்டின் அடிப்படை சட்டம் மீறப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டிய அவர் இந்த தாக்குதல் சம்பவத்தை சிவில் சட்டத்துக்கு இணங்கவே விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற தாக்குதல் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு தண்டனை வழங்குவதற்கு சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது என நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆசு மாரசிங்க, “விசேடமாக, தாக்குதல் சம்பவத்தின்போது பாதுகாப்புக்காக வந்த பொலிஸார் மீதும், கதிரைகளை உடைத்து தாக்குதல் நடத்தினர்.
இவ்வாறான நிலையில், இந்த சம்பவத்தை நாடாளுமன்றுக்கு உள்ளேயே விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கூறுவதை நாம் முற்றாக நிராகரிக்கிறோம்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறான முன்னுதாரணத்தையே இதன் ஊடாக வெளிக்காட்டியுள்ளார்கள். கடந்த காலங்களில் நாடாளுமன்றுக்குத் தீ வைப்போம் என்றுக்கூட சில உறுப்பினர்கள் கூறினார்கள்.
இதுபோன்றவர்களுக்கு நிச்சயமாக சிவில் சட்டத்துக்கு இணங்க தண்டனைப் பெற்றுக்கொடுக்கவே வேண்டும்.” என கூறினார்.
