(ஜெ.ஜெய்ஷிகன்)
மட்.ககு.கல்மடு விவேகானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு இன்று செவ்வாயக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் அதிபர் சா.பாலச்சந்திரன் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது.
கல்மடு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி.சா.ரவிராஜா (கல்வி முகாமைத்துவம்) திருமதி.சி.கங்கேஸ்வரன் (கல்வி நிர்வாகம்) ஆகியோரும் கௌரவ அதிதியாக ஆசிரியர் வளநிலைய முகாமையாளர் வ.பஞ்சலிங்கம் மற்றும் அயற்பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிரியர்கள், பெற்றார்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.





