ரஜினியின் ‘பேட்ட’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தன.இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்துவருகின்றன.
சென்னையைப் பொறுத்தவரை ‘பேட்ட’ வசூலே அதிகம். ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் ‘விஸ்வாசம்’ படத்தின் வசூலும் அதிகரித்துள்ளது.
தற்போது 4 வார முடிவில் ‘பேட்ட’ ரூ.15.41 கோடியும், ‘விஸ்வாசம்’ ரூ 12.96 கோடியும் சென்னையில் வசூல் செய்துள்ளது.
இதேவேளை, ‘பேட்ட’யை விட தமிழகத்தில் ‘விஸ்வாசம்’ வசூலே அதிகம் என விநியோகஸ்தர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.





