LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, February 20, 2019

ஏமன் போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புதல்!

ஏமனில் போர் நிறுத்தத்திற்கு அந்நாட்டு அரசாங்கமும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை நிறைவிற்கு கொண்டு வருவதற்காக ஐக்கிய நாடுகள் சபை நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பலமுறை போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அரசு மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டு அது தோல்வியில் நிறைவடைந்தது.

இந்த நிலையில் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஏமனிய அரசாங்கமும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இரண்டு நாள் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஹோடேடாஹ் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்ததுக்கு ஏமன் அரசு மற்றும் ஹவுத்தி கிளர்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் உணவு மற்றும் மருத்துவ வசதி தேவைப்படும் மக்களுக்கு வேண்டிய உதவிகள் சேரும் என்று நம்புகிறோம். போர் நிறுத்தம் படிபடியாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ”என கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏமனில் இடம்பெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக இதுவரையில் ஐந்தாயிரம் குழந்தைகள் உள்ளிட்ட 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7