LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 11, 2019

தென்னாபிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த கொக்கேய்ன் மும்பை பொலிஸாரிடம் சிக்கியது!

தென்னாபிரிக்காவின் ஜோஹன்னஸ்பேர்க் நகரத்திற்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படவிருந்த சுமார் 5 மில்லியன் டொலர் பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருளை மும்பை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த போதைப் பொருளை எடுத்துச் செல்லவிருந்த மூன்று நைஜீரிய நாட்டவர்களையும், ஒரு பிரேசில் பெண்ணையும் பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ஐந்து மில்லியன் டொலர் பெறுமதியான 14 பவுண்ட் எடையுள்ள கொக்கேய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

குறித்த நான்கு பேரும் கார்லி பின்டோ, நீரஸ் ஒக்கோபோ, மைக்கல் ஹோப் மற்றும் சிமோன் என்ற பெயர்களை உடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திரைச்சீலைகளில் அலங்காரமாகப் பயன்படுத்தப்படும் புடைவைகள் மற்றும் உலோக வளையங்கள் ஆகியவற்றில் இவர்கள் போதைப் பொருளை சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7