LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 9, 2019

கிராமத்தில் புகுந்த யானைகளால் வீட்டுத் தோட்டம் சேதம்

(பாண்டி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மீள் குடியேற்ற கிராமமான மஜ்மா கிராமத்தில் இன்று அதிகாலை புகுந்த யானைகளால் அப்பகுதியில் உள்ள வயல்களும் வீட்டுத்தோட்டமும்; சேதமடைந்துள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மீள்குடியேற்ற கிராமமான மஜ்மா நகரில் புகுந்த யானைகளால் அறுவடைக்கு தயாராக இருந்த வயல்களும் தென்னை, மரவள்ளி, வாழை, சோளன் போன்ற வீட்டுத் தோட்ட பயிர்களும்; சேதமாக்கப்பட்டுள்ளது.

 வெள்ளாமைச்சேனை காட்டுப்பகுதியில் இருந்து வரும் யானைகள் இவ்வாறு பயிர்களை சேதப்படுத்துவதாகவும் இரவு நேரங்களில் நிம்மதியில்லாமல் அச்சத்திலயே இரவுகளை கழிப்பதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக பல தடவை யானையில் இருந்து பாதுகாக்க யானை வேலி அமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்ததாகவும், இவ்விடயம் தொடர்பாக எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.


எனவே யுத்தத்தில் இடம்பெயர்ந்து மீண்டும் மீள்குடியேறிய எங்களை யானையின் மூலம் திரும்பமும் இடம்பெயர வைக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யானை வேலி அமைத்து தருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.










 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7