ஒன்ராறியோ கார் தொழிற்துறை திட்டத்திற்கு 40 மில்லியன் டொலர்களை டக் ஃபோர்ட் அரசாங்கம் அறிவித்துள்ளது.குறித்த நிதியானது ஒன்ராறியோவில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, அதன் புதிய கண்டுபிடிப்பு மற்றும் பயிற்சி ஆகியவற்றிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் இறுதியில் ஜெனரல் மோட்டர்ஸ் வாகன உற்பத்தித் தொழிற்சாலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து சுமார் 2,600 பேர்வரை வேலையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
GMஇல் உள்ள தொழிலாளர்களை இலக்காகக் கொண்டே குறித்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கிடப்பட்டதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் டோட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஜெனரல் மோட்டர்ஸ் தொழிலாளர்கள் வாகனத் துறையில் மீண்டும் வேலை செய்ய முடியும் எனவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் டோட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.





