வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் எதிர்வரும் 25ஆம் திகதி வியட்நாமில் தரையிறங்குவார் என ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இரண்டாம் உச்சநிலை சந்திப்பை நடத்தவே அவர் வியட்நாம் செல்லவிருக்கின்றார்.
இரு நாட்டுத் தலைவர்களும் பெப்ரவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் வியட்நாமில் சந்தித்து பேசவுள்ளனர். இரு தலைவர்களுக்கும் இடையில் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் வரலாற்று முதல் சந்திப்பு நடைபெற்றது.
இந்நிலையில் வட கொரியத் தலைவர் கிம், ஹனொய்யில் தரையிறங்கியவுடன், வியட்நாமிய அதிகாரிகளைச் சந்திப்பார் என நம்பப்படுகிறது.
அதன்பின்னர் அவர் வியட்நாமிய உற்பத்தித் தளத்திற்குச் சென்று பார்வையிடுவார் எனவும் கூறப்பட்டது.





