ஸ்கொட்லாந்தின் Strichen பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.இரண்டு கார்கள் மோதிக்கொண்டதனாலேயே நேற்று(சனிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்குள்ளான கார்களில் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





