வடக்கு சீனாவில் உள்ள கனிம சுரங்கத்தின் சுவரில் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் படுகாயடமந்துள்ளனர்.Yinman பகுதியில் உள்ள கனிம சுரங்கத்தில் பணிபுரியும் சுமார் 50 ஊழியர்களை அழைத்து வந்த வாகனம் நேற்று (சனிக்கிழமை) விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வாகனம் சுரங்கத்தினுள் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்தது அங்குள்ள சுவரில் வேகமாக மோதியமையினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 20 ஊழியர்கள் உயிரிழந்தனர் என்றும் 30 பேர் காயம் அடைந்தனர் என்றும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





