
கைது செய்யப்பட்டவர் மீது இரண்டாவது கொலை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக எட்மன்டன் பொலிஸார் கூறியுள்ளனர்.
கடந்த 2016 யூலை 5 ஆம் திகதி, குழந்தையின் தாய் தன் ஆறு மாத மகனை வேலைக்குச் சென்றபோது நண்பனிடம் விட்டுவிட்டு சென்றுள்ளார். இதன் பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பிய போது குழந்தை சுகயீனமுற்றிருப்பதை அறிந்த தாய் அவசர பிரிவுக்கு அழைப்பு விடுத்தார்.
அங்கு வந்த அவரச மருத்துவ குழு குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்த போதும், இரண்டு நாட்களில் குறித்த குழந்தை உயிரிழந்தது. குழந்தை இறப்பதற்கு தலையில் ஏற்பட்ட காயங்களே காரணம் என மருத்துவ அறிக்கைகள் வெளியாகியது.
இதன் பின்னர் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி, 29 வயதுடைய நபரை கைது செய்ய பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
