இதில் அருண் விஜய்யுடன் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜோர்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து, வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றது.
சமீபத்தில் தணிக்கை குழுவினருக்கு இப்படம் காண்பிக்கப்பட்டு யூ/ஏ சான்றிதழ் பெறப்பட்டது. இப்படத்தை ‘குற்றம் 23’ திரைப்படத்தை தயாரித்த இந்தர் குமார் தயாரித்துள்ளார்.
மேலும் இப்படத்தின் இசை மற்றும் திரைப்படத்தை வெளியிடும் திகதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
