LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, February 21, 2019

வாழைச்சேனை வைத்தியசாலைக்கு ஏப்ரல் மாதம் 12 வைத்தியர்கள் நியமனம்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு பன்னிரண்டு வைத்தியர்களை நியமிப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மெற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-

கிழக்கு மாகாணத்தில் உள்ள எல்லா மாகாண வைத்தியசாலைகளிலும்  நிறைய குறைபாடுகள் காணப்படுகின்றது. ஆளனி பற்றாக்குறை மாத்திரம் அல்ல பௌதீக பற்றாக்குறையும் காணப்படுகின்றது. இவற்றை நிவர்த்தி செய்யக் கூடிய பல முயற்சிகளை நான் மேற்கொண்டு வருகின்றேன்.

 மாகாணம் குறிப்பிட்ட நிதியும், குறிப்பிட்ட அதிகாரங்களுடனும் கொண்ட சபை. அதிகமான நிதி, ஆளனிகளை மத்திய அரசு வைத்திருக்கின்றது. மத்திய அரசுடன் உறவை பேணி சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் பேசி முடியுமான அளவு விரைவாக கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல நிருவாக ரீதியான பிரச்சனைகள், இனரீதியான முரண்பாடுகள், கல்வி, சுகாதாரம் சகல துறைகளிலும் இருக்கின்ற சகல பிரச்சனைகளையும் முடியுமான வரை தீர்த்து வைக்க வேண்டும் என்று செயற்பட்டு வருகின்றேன்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு 12 வைத்தியர்களை நியமிப்பதற்கு சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாது காணப்படுகின்றது. இவற்றை நிவர்த்தி செய்ய ஓய்வு பெற்ற வைத்தியரை மீள நியமித்து அவருக்கான சம்பளத்தினை கிழக்கு மாகாண சபை வழங்க முடிவு செய்துள்ளது.

கிழக்கு மாகாண வைத்தியசாலையில் மகப்பேற்று மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாது காணப்படுகின்றது. கொழும்பு வைத்தியசாலைகளில் மேலதிகமான வைத்தியர்களை வைத்துள்ளனர். சுகாதார அமைச்சு தரமுடியாது என்றால் கிழக்கு மாகாணம் மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாது இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

அத்தோடு கிழக்கு மாகாணம் கல்வியில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்னவென்று பார்த்தார். கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்ப பாடங்களில் மாணவர்களின் சித்தி குறைவாகவே காணப்படுகின்றது. குறித்த பாடத்திற்கு ஆசிரியர் குறைவாகவே காணப்படுகின்றனர். இவற்றினை மத்திய அரசாங்கம் வழங்குவதில்லை.

எதிர்வரும் ஏப்ரல் 5ம் திகதிக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் உட்பட்ட ஏனைய பாடங்களுக்கு மாகாணத்தில் உள்ள உயர்தரம் படித்த தகுதியான மாணவர்களை கொண்டு நிரப்புவதற்கு தீர்மானம் எடுத்துள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் ஐந்து வலயங்கள் ஆசிரியர் பற்றாக்குறையால் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இவற்றினை நிவர்த்தி செய்ய பல முனைப்புக்களை நான் மேற்கொண்டு வருகின்றேன்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 10ம் திகதி எனது பதவியை இராஜினாமா செய்வேன். அதற்குள் 13வது சரத்தின் கீழ் வழங்கியுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் நூறு வீதம் பயன்படுத்தி பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன் என்றார்.

 வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எப்.மதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.அன்சார், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.அருள்குமரன், மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி.கே.நவரெட்ணராஜா, ஓட்டமாவடி பிரதேச சபை பிரதி தவிசாளர் எல்.அஹமட் லெப்பை, வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உப தலைவர் எம்.எஸ்.ஹாறுன், வாகரைப் பிரதேச சபை உறுப்பினர் எம்.தாஹீர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எம்.முஸம்மில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7