ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயற்சித்த முஸ்லிம் மத குரு பெதுல்லா குலெனுடன் தொடர்பில் இருந்ததாக கூறியே இவர்களை கைது செய்ய அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு துருக்கி ஜனாதிபதி டயிப் எர்டோகனின் ஆட்சியைக் கவிழ்பதற்கான இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 250 பேர் வரை உயிரிழந்தனர்.
இந்த அக்கட்சிக் துருக்கியில் பிறந்தவரும் தற்போது அமெரிக்காவில் வசிப்பவருமான முஸ்லிம் மத குரு பெதுல்லா குலென் தான் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக தற்போது வரை 77 ஆயிரம் பேரை அரசாங்கம் கைது செய்துள்ளது.
இந்த நிலையில், தற்போது பெதுல்லா குலென் தொடர்பில் உள்ளவர்கள் எனக் கூறி மேலும் ஆயிரத்து 112 பேரைக் கைது செய்ய துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.






