எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதன்படி தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுவையில் ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்து இன்று (புதன்கிழமை) சென்னையில் ஒப்பந்தம் கையொப்பமானது.
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துள்ளது. இந்நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நேற்று டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினர்.
அதன்பின்னர் தமிழகத்துக்கு விஜயம்செய்த காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர்களான வேணுகோபால், முகுல் வாஸ்னிக் ஆகியோர் சென்னையில் தி.மு.க. தலைவர்களுடன் கலந்துரையாடினர்.
இதன்பின்னர் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸூக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.





