2019 – 2020 ஆண்டுக்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் மற்றும் செயலாளரை நியமிப்பதற்காக இடம்பெற்ற தேர்தல் நிறைவுபெற்றுள்ளது.இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்காக போட்டியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செயலாளர் பதவிக்காக
போட்டியிட்ட சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சட்டத்தரணிகள் சங்க வாக்களிப்பு நிறைவு – கலிங்க இந்ததிஸ்ஸ, கௌசல்யா நவரத்ன முன்னிலை!
2019 – 2020 ஆண்டுக்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் மற்றும் செயலாளரை நியமிப்பதற்காக இடம்பெற்ற தேர்தல் நிறைவுபெற்றுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 83 மத்திய நிலையங்களில் இன்று (புதன்கிழமை) காலை 7.30 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்காக ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி மகிந்த லொக்குகேவும் போட்டியிட்டுள்ளதுடன், செயலாளர் பதவிக்காக சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன மற்றும் சட்டத்தரணி வெலி அங்கவும் போட்டியிட்டுள்ளனர்.
தற்சமயம் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதில் தலைவர் பதவிக்காக ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸவும், செயலாளர் பதவிக்கான போட்டியில் சட்டத்தரணி கௌசல்யா நவரத்ன முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





