பல மில்லியன்கள் ரூபா செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் கௌரவ அல்ஹாஜ் அப்துல்லா மஹரூப் அவர்களின் ஏற்பாட்டில் இவ் அபிவிருத்தி நிகழ்வுகள் யாவும் இடம் பெற்றன.
உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
குறித்த நிகழ்வுகளில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா,கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட், முன்னால் குச்சவெளி பிரதேச சபை தவிசாளரும் முன்பள்ளி பாலர் பாடசாலை திருகோணமலை மாவட்ட பணிப்பாளரூமான ஆதம்பாவா தௌபீக், பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் உட்பட குச்சவெளி பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், வட்டார வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
அ . அச்சுதன்





