சோமாலிய தலைநகர் மொகடிஷுவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கார் குண்டுத்தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியாவில் இயங்கிவரும் அல் ஷபாப் தீவிரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசாங்கத்திற்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோமாலியாவின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் மொகடிஷுவிலுள்ள மக்கள் அதிகம் கூடும் சந்தைப்பகுதியில் இன்று(திங்கட்கிழமை) மேற்கொண்ட கார் குண்டுதாக்குதலில் 10 பேர் உயிரிந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் அதிகளவானவர்கள் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.





