
ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில், நேற்று காலை மாலை ஆலயத்தின் திருச்சொரூப பவனி சிறப்பான முறையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன்போது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசிவேண்டி விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டது. ஆலயத்தின் பங்குத்தந்தை பிரைனர் செலர் உட்பட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் இந்த திருவிழானை சிறப்பித்தனர்.

இன்றைய கொடியிறக்க திருவிழாவில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
திருவிழாவின் இறுதி நாளான இன்றைய ஆராதனையின்போது ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை, உயர்தர பரீட்சைகளில் சிறப்பு சித்திபெற்ற மாணவர்கள் ஆயரினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
