LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, January 10, 2019

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நள்ளிரவு முதல் குறைப்பு – அரசாங்கம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நள்ளிரவு முதல் லீட்டருக்கு 2 ரூபாயாக குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையில் திருந்தங்களை மேற்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கும் குழு அமைச்சர் மங்கள சமரவீரவின் தலைமையில் இன்று மாலை கூடியது.

எரிபொருள் விலை நிர்ணயத்தின் கீழ் மாதத்தின் ஒவ்வொரு 10 ஆவது நாளிலும் எரிபொருள் விலைகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

அந்தவகையில் ஒக்டேன் 95 ரக பெற்றோல், ஒக்டேன் 95, ஓட்டோ டீசல் 2 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளதுடன், சுப்பர் டீசல் 3 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாளை முதல் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 123 ஆகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 142 ஆகவும், ஓட்டோ டீசலின் விலை 99 ரூபாயாகவும், சுப்பர் டீசல் விலை 118 ரூபாயாகவும் காணப்படும்.

மேலும் இன்று நள்ளிரவு முதல் விலைகள் குறைக்கப்பட்டாலும், சர்வதேச எண்ணெய் விலைகள் ஜனவரி இரண்டாம் வாரத்தில் இருந்து தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7