LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, January 10, 2019

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நிபந்தனையில் விடுதலை!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த 8 இந்திய மீனவர்களையும் நிபந்தனையுடன் ஊர்காவற்துறை நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) விடுவித்தது.

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடந்த 7 ஆம் திகதி நான்கு மீனவர்களும், மறுநாள் நான்கு மீனவர்களும் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அத்துடன் 2 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன.

இவர்களை யாழ்.நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் ஆஜர்படுத்தியிருந்தனர்.

குறித்த மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

குறித்த வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது . இவ்வழக்கை விசாரித்த நீதவான், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்படுமென்ற நிபந்தனையுடன் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7