வவுனியா நெடுங்கேணியில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.அவர் இன்று (வியாழக்கிழமை) வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
நேற்றிரவு நெடுங்கேணி பொலிஸார், இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை சந்தேகத்தில் ஒருவரை சோதனை செய்துள்ளனர்.
இதன் போது அவரிடமிருந்து 18 ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான தாள்களும் 10 ஆயிரம் ருபாய் பெறுமதியான தாள்களும் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணையை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்திலும் பரிமாற்றத் தயாராகவிருந்த போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





