திருகோணமலை, சாம்பல் தீவு 06 ம் வட்டார பகுதியானது ஆத்திமோட்டை கோணேசபுரி சாம்பல்தீவு குடியிருப்பு பிரதேசங்களின் நடுவில் காணப்படுகின்றது, இதனுள் இருகிராமங்களை இணைக்கும் வீதிகள், குடியிருப்புகாணிகள் வயல் நிலங்கள் தோட்டக்காணிகள் காணப்படுகின்றது இவைகளே இன்று வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரால் அடையாளக்கல் இடப்பட்டு முற்றுகையிடப்பட்டுள்ளது என தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் உப்புவெளி பிரதேச சபை உறுப்பினர் ச . விவுசன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
இச் செயற்பாட்டினால் இப்பிரதேச மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது, இவ்வாறு தமிழ் மக்களின் நிலங்களும், பொது இடங்களும் பரவலாக அரச திணைக்களங்கள் மூலம் அபகரிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் இனரீதியான முரன்பாடுகளையும் ஏற்படுத்துகின்றது, வனபாதுகாப்பு திணைக்களம் தொல்பொருள் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்கள் அனைத்தும் சிங்களத்தின் பிரதிபலிப்பு என மக்கள் மனதில் என்னம் உருவாகியுள்ளது.
இந்த நிலையினை நாமும் விரும்பவில்லை இவ்வாறான நில அபகரிப்புக்களை மக்களோடு இணைந்து நாமும் வன்மையாக கண்டிக்கின்றோம், பிரதேச செயளாலரை சந்தித்து மனு ஒன்றினையும் சமர்ப்பித்துள்ளோம், எனினும் இது தொடர்பான முமுமையான தீர்வு எட்டும் வரை மக்கள் சார்பாக மக்களுடன் முன்னின்று குரல் கொடுப்போம் என்றார்.
அ . அச்சுதன்