கனடாவின் துறைமுக நகரான ஹமில்டனில் எதிர்வரும் சில தினங்களுக்கு கடும் குளிரான காலநிலை நிலவும் என்பதுடன், அங்கு உறைபனி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் இன்று(புதன்கிழமை) இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அநாவசிய வெளிப்பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு ஹமில்டன் வாழ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பகல் வேளைகளில் 2 பாகை செல்சியசாக காணப்படும் வெப்பநிலை, இரவு நேரங்களில் -13 செல்சியசாகக் குறைந்து காணப்படும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சுமார் 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் -22 செல்சியஸ் குளிர் காற்று வீசும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, கனடாவின் லண்டன், பிரிட்டிஷ்கொலம்பியா, எட்மன்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.





