ஒட்டாவாவின் வனீர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.வனீர் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர் ஆணா அல்லது பெண்ணா என்பது தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதனையும் பொலிஸார் வெளியிடவில்லை.
இந்தநிலையில் குறித்த துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒட்டாவா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.





