
வோர்விக்ஷயர் பகுதியை சேர்ந்த 22 வயதான லூயிஸ் போர்டன் என்பவர் மீதே இவ்வாறு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி சந்தேகநபரான தாய் இன்று (சனிக்கிழமை) லீமிங்டன் (Leamington) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
லூயிஸ் போர்டனின் 16 மாத மற்றும் மூன்று வயது பெண் குழந்தைகள் இருவர் கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாத ஆரம்பத்தில் உயிரிழந்தனர்.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன. இது தொடர்பான வோர்விக்ஷயர் பொலிஸாரின் அறிக்கை அரச தரப்பு வழக்கறிஞர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அறிக்கையை ஆராய்ந்த வழக்கறிஞர்கள் தாய் மீதான கொலை குற்றச்சாட்டை ஒப்புகொண்டுள்ளனர்.
அதன்படி, சந்தேகநபர் இன்று லீமிங்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
