
கடந்த 13ஆம் திகதி கிணற்றுக்குள் தவறிவிழுந்த குழந்தை ஜூலெனை உயிருடன் மீட்பதற்குரிய நடவடிக்கைகள் கடந்த இரண்டு வாரகாலமாக இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டது.
இந்தநிலையில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுரங்கத்தொழிலாளர்கள், உயிரிழந்த சிறுவனின் சடலத்தை இன்று அதிகாலை கண்டெடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
197 அடி ஆழமான இந்த ஆழ்துளைக் கிணற்றிலிருந்தே சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குழந்தை ஜூலென் உயிருடன் இருப்பதாக பெற்றோர் நம்பிக்கை வெளியிட்டிருந்த நிலையில், குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
