
புகைப்பிடித்தலை குறைப்பதற்கான முயற்சிகளை வலுவிழக்கச் செய்யும் வகையில் இந்த போலி சிகரெட்டுகள் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வரி செலுத்துவதை தவிர்க்கும் வகையில் இவ்வாறான போலி புகையிலை பொருட்கள் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உள்ளூராட்சி சபை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் சட்டவிரோத வர்த்தகம் காரணமாக வருவாய் மற்றும் சுங்க திணைக்களத்திற்கு ஆண்டுதோறும் 2.1 பில்லியன் பவுண்ட் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
