தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஏமி ஜாக்சன் தனது நண்பர் ஜோர்ஜ் உடனான காதலை வித்தியாசமான முறையில் உறுதிப்படுத்தியுள்ளார்.சமீபத்தில் ஏமி ஜாக்சன், ஜோர்ஜ் என்ற தொழிலதிபருடன் முத்தம் கொடுத்த படம் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்நிலையில், புத்தாண்டு தினமான நேற்று, ஜோர்ஜ் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட ஏமி ஜாக்சன், வாழ்க்கையில் புதிய துவக்கத்தில் கால் பதிக்கிறோம். நான் உங்களை காதலிக்கிறேன். உலகத்திலேயே அதீத மகிழ்ச்சியுடன் நான் இருப்பதற்கு காரணமாக இருப்பதற்காக நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் ஏமி ஜாக்சன் – ஜோர்ஜ் ஆகியோரின் திருமணம் விரைவில் நடைபெற இருப்பது உறுதியாகி இருக்கிறது.





