(ஜெ.ஜெய்ஷிகன்)
அதிமேதகு மதிப்புக்குரிய ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால ஸ்ரீசேன அவர்களின் பணிப்புரைக்கமைய போதைப் பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு இன்று மட்.ககு.கல்மடு விவேகானந்தா வித்தியாலயத்தில் பொருள் தடுப்பு ஊர்வலம்வித்தியாலய அதிபர் திரு.சா.பாலச்சந்திரன் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர்களும் மாணவர்களும் பதாதைகள், சுலோக அட்டைகள் ஏந்தியவண்ணம் கல்மடு கிராமத்தை ஊர்வலமாக வந்து போதைப் பொருள் பாவனைக்கு எதிராக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
