
டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பா.ஜ.க தேசியக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பா.ஜ.க உறுப்பினர்களுடன் காணொளி ஊடாக மோடி உரையாற்றினார். இதன்போது “தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி கதவு திறந்தே உள்ளதுடன் பழைய நண்பர்களையும் இணைத்துக்கொள்வதற்கு தயாராக உள்ளோம்.
அந்தவகையில் வாஜ்பாய் வழியிலேயே தமிழகத்தில் கூட்டணி அமைக்கப்படும்” என மோடி குறிப்பிட்டார்.
இந்நிலையில் மோடியின் கருத்துக்கு பதிலளித்துள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின், “மோடி வாஜ்பாய் அல்லவென்பதுடன் பா.ஜ.க.வுடன் தி.மு.க ஒருபோதும் கூட்டணி அமைக்காது” என குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு ஸ்டாலினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு, பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதில் வழங்கியுள்ளதாவது, “கூட்டணி பற்றி பா.ஜ.க இன்னும் தீர்மானிக்கவில்லை. மேலும் கூட்டணி கதவு திறந்திருக்கிறதென மோடி கூறியது தி.மு.க.வுக்கு அல்ல.
ஆனால், வாஜ்பாய் பாணியில் கூட்டணி அமைப்பதாக மோடி கூறியதை தி.மு.க.வுக்கு விடுத்த அழைப்பாக ஸ்டாலின் ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்” என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
