கனடாவின் லண்டன் பகுதியில் எதிர்வரும் சில தினங்களுக்கு கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சுற்றுசூழல் கனடா அமைப்பினால் இன்று(வியாழக்கிமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று மாலை அல்லது இரவு வேளையில் உறைபனி மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குறித்த உறைபனி மழை நாளை முதல் வலுவடையும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
குறித்த காலநிலை காரணமாக லண்டனிலுள்ள வீதிகள் மிகவும் அபாயகரமாக இருக்கும் என வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.





