இத்தாலிக்கான வட கொரிய தூதுவர் ஜோ சோங் கில் ரோமில் வைத்து காணாமல் போயுள்ளதாக தென் கொரிய புலனாய்வு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.இத்தாலியில் இருந்து பியோங்யாங்கின் உயர் இராஜதந்திரி ஒருவர் இனந்தெரியாத மேற்கு நாட்டிற்கு தஞ்சம் கோரி வருவதாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வடகொரியாவின் ரோமிற்கான பதில் தூதுவரான ஜோ சோங் கில், வட கொரியாவின் உயர் மட்ட அதிகாரிகளின் மகன் மற்றும் மருமகன் என்று அறியப்படுகிறார்.
இந்த நிலையில், இறுதியாக லண்டனுக்கான பதில் தூதுவராக இருந்த தாயி யொங்-ஹோ கடந்த 2016 ஆம் ஆண்டு பதவியை துறந்து தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தென்கொரியாவுக்கு தப்பிச் சென்றார்.
இதனிடையே, வட கொரியாவிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு உயர்மட்ட அதிகாரிகளில் ஒருவர் காணாமல் போனமை வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஆட்சிக்கு பாரிய அடியாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது மக்களிடையே அதிபர் கிம் நிலைத்து நிற்பதற்காக மேற்கொள்ளும் செயற்பாடுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், வட கொரியாவின் தகவல்களை உலக சமூகத்திடம் பரப்புவதற்கும் ஜோ முயற்சிக்கலாம் என்று தென்கொரியாவின் புலனாய்வு பிரின் பேச்சாளரும், ஆளும் நாடாளுமன்ற உறுப்பினருமான கிம் மின்-கி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பதில் தூதுவரான ஜோ சோங் கில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே வௌியேறி இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





