பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு மற்றொரு கடுமையான பனிப்புயல் தொடர்பில் முன்னறிவிப்பு எச்சரிக்கையை சுற்றுசூழல் கனடா விடுத்துள்ளது.அந்தவகையில் குறித்த பகுதியில் நேற்று (புதன்கிழமை) முதல் பலத்த காற்று, பனிப்புயல் மற்றும் மழை என்பன தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என அறிவித்துள்ளது.
மேலும் தெற்கு கடற்கரைக்கு மழை பெய்யும் எனவும், கொக்ஹஹல்லா மற்றும் கடல் வழியாக ஸ்கை நெடுஞ்சாலைகள் உட்பட மாகாணத்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவும் ஏற்படும் என எதிர்வு கூறியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் வான்கூவர் பகுதிகளை தாக்கிய கடுமையான புயல் மற்றும் மழை காரணமாக 750,000 பேருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





