கிழக்கிலங்கை இந்துசமய கலாசார மேம்பாட்டு நிறுவனமானது கடந்த பல வருடகாலமாக கிழக்கு மாகாணத்தில் பல சமய கலாசார மேம்பாட்டு தொண்டுகளை செய்துவருவது யாவரும் அறிந்ததே. இந்நிறுவனமானது இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் HA/4/BT/310 எனும் பதிவிலக்கத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் சித்திரை மாதம் நடைபெறவிருக்கும் இளஞ்சைவப்புலவர், சைவப்புலவர் பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகளுக்கு பாடவகுப்புக்கள், கருத்தரங்குகள் நடாத்துவதற்கு இந்நிறுவனத்தினால் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. பங்குபற்ற விரும்புவோர்கள் நிறுவனத்தின் பொதுச்செயலாளர் சைவப்புலவர், சி.சிவராஜா அவர்களை 0773822976 எனும் இலக்கத்திற்கு தொடர்புகொண்டு பதிவுசெய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இதுவரை இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்காதவர்களும், மற்றும் சமய தீட்சை பெறாதவர்களும் தொடர்பு கொள்ளவும். இந்நிறுவனத்தின் மூலம் அறநெறிப்பாடசாலை இறுதியாண்டு பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான முன்னோடிக்கருத்தரங்கும் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.





