திருகோணமலை, உதயபுரி அருள்மிகு முத்துக்குமார சுவாமி ஆலயத்தின் புதிய மூலஸ்தானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று 21ஆம் திகதி தைப்பூசத் தினத்தன்று நண்பகல் 12.35 மணி தொடக்கம் 2.05 மணி வரையுள்ள சுப வேளையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் சமய ஆர்வலர்கள் நலன் விரும்பிகள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருப்பதை படங்களில் காணலாம்.
(அ . அச்சுதன் )











